பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் முல்லைத்தீவில் இன்றும் (25) 85 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைகப்பட்டது.
அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2327 குடும்பங்களை சேர்ந்த 6916 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2715 குடும்பங்களை சேர்ந்த 8606 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக நாளாந்தம் கூலி தொழிலுக்கு செல்கின்ற பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கி முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு தரப்பினராலும் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி 1000 பேருக்கான உலருணவு பொதிகள் வழங்கும் திட்டம் 22.12.2023 அன்று புதுக்குடியிருப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொண்றும் தலா 3500 ரூபா பெறுமதியான ஆயிரம் உலருணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது இந்நிலையில் 22.12.2023 அன்று 160 பேருக்கும் 23.12.2023 அன்று 335 பேருக்கும் 24.12.2023 அன்று 420 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட 85 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் 1000 பேருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது