வட்டுக்கோட்டையில் அழகுக்கலை மற்றும் தையல் பயிற்சி நெறிகள் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் 14வது அணியினருக்கான மேற்படி கற்கைநெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
6மாதங்கள் கொண்ட இந்த கற்கை நெறியானது முற்றிலும் இலவசமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் விருந்தினருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, தேவாரம் இசைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானது.
இந்த கற்கைநெறியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆரம்பித்து வைத்ததுடன் இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.