மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

கிளிநொச்சி, பெப்.21

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் 21, 22 வயதுடைய அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் ஒருவர் இராணுவ வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply