
திருகோணமலை, பெப்.21
திருகோணமலை – பன்குளம் பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்திருந்த யானை உயிரிழந்தது.
கடந்த 7 ஆம் திகதி பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் காணியொன்றின் வாய்க்காலில் யானை வீழ்ந்தது. இந்த நிலையில், யானையின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.
அதன் உடல் நிலையை கருத்திற்கொண்டு மருத்துவ குழுவினால் சிகிச்சையளிக்கப்பட்டு, கால்வாயில் வைத்தே சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது.





