
கொழும்பு, பெப் 21: கொழும்பு வரையறுக்கப்பட்ட வர்த்தக உரக்கூட்டுதாபனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக சிரேஷ்ட ஊடகவியலாளரான ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்பு செயலாளர் ஜி.காசிலிங்கம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்ட்ரில் ” கொழும்பு கொமர்ஷல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையில் நியமனம் பெற்ற மதனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் கடமைகளை மிகவும் பலத்துடனும் தைரியத்துடனும் மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.





