குருநாகல் – ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க என்ற சிறுவனே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போதே சிறுவன் இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார் எனவும் தெரியவருகின்றது.