பனையில் ஏறி ஹரிகரனின் பாடலை கேட்கும் இளைஞர்கள்..!! யாழ். முற்றவெளியில் அரிய காட்சி..!!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்  ஹரிகரனின் இசை நிகழ்வு தற்போது  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இளைஞர்கள் பலர் பனை மரத்தில் ஏறி நின்று பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள்  பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  

ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சி இலவசம் என அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் ஆசனப்பதிவுகளுக்கு  கட்டணம் அறவிடப்பட்டது.  ஏனையவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியை பார்வையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள பனைமரங்களில் இளைஞர்கள் ஏறி நின்று நிகழ்சியை பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *