இளம் குடும்பஸ்தருக்கு எமனான மின்விசிறி…! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…! samugammedia

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22வயதுடைய இளம் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டிலுள்ள, மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த  குடும்பஸ்தருக்கு, அண்மையிலேயே திருமணம் இடம்பெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றமை அப் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply