கொழும்பு – ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.