மீண்டும் கோப்பி உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டும் இலங்கை..!!

இலங்கையானது கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது.

மீண்டும் கோப்பி பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக , மலையகத்தில் வெற்று நிலங்களை பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகளாவிய ரீதியில் தேவை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையானது கோப்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.

இதற்கமைய  கோப்பி பயிரிடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , விவசாயிகளுக்கு கற்பிக்கவும் கோப்பி பயிர்ச்செய்கை நிபுணர்களைக் கொண்டு வர வேண்டும்.

மேலும், நீண்ட கால அடிப்படையில் , ஏற்றுமதி சந்தையில் சிறிய அளவுகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய பிறீமியம் தரமான முக்கிய சந்தையை வழங்குவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். ” என லங்கா கோப்பி சங்கத்தின் தலைவர் குஷான் சமரரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *