கொழும்பில் உயர்ந்த தரத்திலான பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமான கல்வியை வழங்கும் வகுப்பறைகள் தொடர்ச்சியாக குறைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இனங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் கல்வியை பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
குறிப்பாக, இது கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் இசிபதன போன்ற உயர்ந்த தரத்திலான பாடசாலைகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மாறாக, குறித்த பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் கல்வி வழங்கும் வகுப்பறைகள் தொடர்ச்சியாக நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்டு வருகின்றன.
நான் இந்த பிரச்சினைக்கான தீர்வை பெறுவது குறித்து முயற்சி எடுத்த போது, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் றோயல் கல்லூரி தொடர்பாக பேச வேண்டாம் என கூறினார் என தெரிவித்துள்ளார்.