சாந்தனின் இறுதி கிரியைகள் இன்று(04) காலை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இறுதிக் கிரியைகளின் நிறைவில் சாந்தனின் இறுதி ஆசையின் படி சாந்தனின் தாயாரால் ஒருபிடி சோறு சாந்தனுக்கு ஊட்டப்பட்டது.
குறித்த நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்ணீர் மல்க செய்துள்ளது.
அதேவேளை ‘தம்பி வாறன் வாறன் எண்டு எங்களை ஏமாற்றிவிட்டானா’ என கதறி அழுதவாறு சாந்தனின் தாயார் சாந்தனுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாந்தனின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து பெருந்திரளான மக்களின் கண்ணீர் மழைக்கு மத்தியில் எடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.