பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் கனடாவில் இருக்கும் போதே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் தற்போது கனடாவில் இருக்கின்றேன். எனினும் கனடாவில் நான் அரசியல் தஞ்சம் கோர விண்ணப்பிக்கவில்லை. மாறாக அங்கு வேலை விசாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
அரசியலில் இருந்து நான் எதையும் கற்கவில்லை, நான் நடிப்பில் சம்பாதித்தது மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.