நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.