“திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டு தொழில் இடைத்தரகர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றுவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற அமர்வின் போது மியன்மார் சைபர் கிரைம் பயங்கரவாத குழுவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பிய போது அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மியன்மார் சைபர் கிரைம் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் மொழி பேசுபவர்களுக்க பாதிப்பு
இவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இணையத்தளம் முறைமை ஊடாக நிதி மோசடியில் ஈடுபடுவதற்கு இவர்கள் பலவந்தமான முறையில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அத்துடன் அவர்களுக்கு உளவியல் ரீதியில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அண்மையில் மூன்று இலங்கையர்கள் டுபாய் சென்று அங்கிருந்து பேங்கொக் சென்று தரை வழியாக தாய்லாந்து செல்ல முயற்சித்துள்ளார்கள்.
திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள மொழி பேச தெரியாத, தமிழ் மொழி பேசுபவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தான் வெளிநாட்டு தொழில் இடைத்தரகர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.” என குறிப்பிட்டார்.
The post வெளிநாட்டு மோகத்தால் பாதிக்கப்படும் தமிழர்கள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.