
கொழும்பு, பெப் 22: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படும் கடன்களுக்கு எந்த தடையும் இல்லை என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது டுவிட்டர் பதிவில் “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைக் கடன் பெறுவோர் வரம்பை கடைப்பிடிக்குமாறு அனைத்து அரச வங்கிகளிடமும் இலங்கையின் மத்திய வங்கி கோரியுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.