
யாழ். ஆரியகுளம் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் – ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள கெற்றப்போல் சந்தியில் சற்று முன்னதாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்டோவை செலுத்திச் சென்ற நபருக்கு தலை பகுதியில் காயமடைந்திருப்பதாக மேலும் தெரிவித்தார்.