2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் தின நிகழ்வுகள்,தென்மராட்சி கலாசார மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும்,வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலில் இடம்பெறும் இன்றைய நிகழ்வின் ஆரம்பமாக ,யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்த துவிச்சக்கர வண்டி பேரணி, கலாசார மண்டபத்தில் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து மேடை நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.நிகழ்வில் மாவட்டச் செயலர் க.மகேசன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



