
நாட்டின் நிலமை மோசமடைந்துள்ள நிலையில்,நிதி அமைச்சரை இரண்டு மாதங்களாக காணவில்லை,அவர் எங்கே என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் நிலை மோசமடைந்து செல்கிறது.எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன.
எரிபொருள் ,மின்சார பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
டொலர் பிரச்சினையால் எல்லாமே கைமீறிப் போகின்றது.
இந்த நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜ பக்ச நிலைமையை தெளிவு படுத்தமால் இருக்கின்றார்.
இரண்டு மாதங்களாக அவரை காணவில்லை.அவரின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.