பால் மா விலை குறைப்பு..! அமைச்சர் அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 – 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *