பாதுகாப்பற்ற கல்விச் சுற்றுலா நடத்த வேண்டாம்: பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

கொழும்பு, பெப் 22: பாதுகாப்பற்ற கல்விச் சுற்றுலா, யாத்திரை போன்றவற்றை நடத்த வேண்டாம் என்று பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு மூத்த அதிகாரி கூறுகையில் “கடந்த 18 மாத காலப் பகுதியில் ஆறுகள், தொட்டிகள், ஆழமான நீர்நிலைகளில் மூழ்கி 168 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பற்ற கல்விச் சுற்றுலா, யாத்திரை போன்றவற்றை நடத்த வேண்டாம் என்று பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற பயணங்கள் செல்ல அனுமதி வழங்கினால் பாடசாலை அதிபர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ஆபத்தான சுற்றுலாக்களை ஒழுங்கமைத்த ஆறு பாடசாலை ஆசிரியர்கள், இரண்டு அதிபர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *