
நாட்டில் ஊடகவியலாளர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் அடக்கப்படுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் பல ஊடக வியலாளார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஊடக நிறுவனங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு இன்று வரையில் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்ற வருகின்றன. குற்றவியல் திணைக்களம் மூலம் ஊடகவியலாளர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக கொண்டு வரப்படும் சட்ட வரைபு மூலம் கருத்து சுதந்திரத்தை குறைத்தல்,வரையறுத்தல்,போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் வடக்கு கிழக்கில் இவ்வாறான அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது.
ஆகவே பல ஊடகவியாளார்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, அரசு, கும்பல்களை தூண்டி விட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
பிரபாகரன் எங்கே? – பார்வதியம்மாவிடம் படையினர் ஏன் விசாரித்தனரென சிவாஜி கேள்விக்கணை