
யாழ். மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசம்களின் சம்மேளன பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தெல்லிப்பளையில் உள்ள அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.
குறித்த சந்திப்பில் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக மீனவ சங்கப் பிரதிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவபடுத்தும் மீனவ சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.