தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் கார் ரக வாகனம் நேற்று அதிகாலை குருநாகல் கிரிவுல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.அப்துல் ரஸாக் (நளீமி) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளரும், புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியதோடு ஜாமிஆ நளீமியா கல்வி நிறுவனத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாகணத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர் மேலதிக சிகிச்சைக்காக ஜோன்கொத்தலாவல இராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏனைய மூவரில் அவரது மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொழும்பினை வசிப்பிடமாக கொண்ட இக்குடும்பம் விடுமுறையை கழிப்பதற்காக பூர்வீகமான தோப்பூர் பிரதேசத்திற்கு வருகை தந்து மூன்று நாட்கள் கழித்த பின்னர் கொழும்பு நோக்கிப் பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றது.
