
கொழும்பு, பெப் 22:
உக்ரைன் பிரச்சினையால் உள்ளூரில் எரிசக்தி நெருக்கடி ஏற்படுமா என்பது குறித்து நிதி அமைச்சர் அறிக்கை
வெளியிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “ரஷ்யா – உக்ரைன் பிரச்சினை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 115 அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கலாம். எனவே, உக்ரைன் பிரச்சினையால் உள்ளூர் எரிசக்தி நெருக்கடி ஏற்படுவது தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார் அவர்