
வவுனியா, பெப்.22
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது,
கனகராயன்குளம் பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது. விபத்தில் பஸ்ஸு காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துஜா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரவூர்த்தி அதிக வேகமாக வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.