
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகையைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்றையதினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி, நெல்லியடி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகை மீட்கப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எனவும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.