கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தினர் யாழிற்கு வருகை..!!

கொழும்பு பௌத்த வாலிபர்  சங்கத்தினர் (Colombo Young Men’s Buddhist Association ) இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன, மத ரீதியான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது. 

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், கொழும்பு பௌத்த வாலிபர்  சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகர, யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரப்பிள்ளை, பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன், மத குருமார்கள், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர், சிவில் சமுகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *