தேசிய அனுசரணை குழு உட்பட கலாசார அமைச்சில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அவற்றை செய்ய முடியாமல் கடும் நெருக்கடியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இனி தனக்கு மாற்று வேலை தேடுவது அல்லது பதவியிலிருந்து விலகுவது தான் மிச்சம் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்த போதிலும் இதுவரை தாம் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.