கொழும்பு – பதுளை ரயில் பாதையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இயங்க ஆரம்பித்த “டன்ஹிந்த ஒடிஸி சொகுசு சுற்றுலா ரயிலின்” பயணத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு கோட்டை நிலையத்தில் தேவாலய சடங்குகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்குப் பிறகு, ரயில் காலை 6:30 மணியளவில் பதுளை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே, டபிள்யூ. பண்டார, போக்குவரத்து மற்றும் வீதிகள் அமைச்சின் அதிகாரிகள், புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் தும்ஹிட ஒடிஸி ரயிலின் கன்னி பயணத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.