மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் அவர்களது மகளாகிய பூஜா உமாசங்கர்.

சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விமான பொறியியல் துறை பட்டம் பெறவுள்ள நிலையில் அவரின் அந்த துறையிலான அசாத்திய திறமை காரணமாக இன்று பேசு பொருளாக மாறியுள்ளர்.
இது பெண்களுக்கு மட்டுமல்ல எமது மண்ணுக்கே பெருமையாகும். விமான துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு இவரின் சாதனை ஒரு உந்துசக்தியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
The post பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழதமிழ் பெண்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.