எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் அதற்கு பொதுஜன பெரமுன இடமளிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.
அத்துடன் அது முடிவடைந்துவிட்டது. இனி அவரே தீர்மான;க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.