வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல் ஹிரியால பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் வறுமையில் இருந்து மீளத் தயாராகும். அத்துடன் இந்த வருட இறுதியில் உருவாகும் திருப்புமுனையின் ஊடாக இந்நாட்டில் 220 இலட்சம் பேரின் வாழ்நாளை அதிகரிக்கும் வளர்ச்சியானது அனைவருக்கும் சுபிட்சத்தையும், அனைவருக்கும் அபிவிருத்தியையும், பொது மக்கள் சகாப்தத்தையும் ஏற்படுத்துவதாகவும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அனைவரும் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்