ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் யாருடன் இணைந்து செயற்படுகின்றார் என்பது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.
அடிக்கடி கட்சி மாறுபவர்களுடன் ஊழலில் ஈடுபடுபவர்களுடன் சஜித் இணைந்து செயற்படக்கூடாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு யாருடன் இணைந்து செயற்படலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசரஅவசரமாக உடன்படிக்கையில் கைச்சாதிட்டுள்ளோம் இது கட்சியின் பல உறுப்பினர்களிற்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.