வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்தார்.
காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.