
சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள் அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக,ஹீரோவாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல நடிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்தவர்கள் உண்டு.
வெளிநாடுகளில் இருந்து வந்த நடிகைகள் என்றால் நமக்கு எமி ஜாக்சன் மட்டும் தான் தெரியும். ஆனால், 2001 ஆம் ஆண்டே வெளிநாட்டு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்து வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் பென்ட்லி மிச்சம்
இந்த படத்தில் ஜோதிகா, அனுபம் கெர், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகிய பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு ஹீரோவாக நடித்தவர் பென்ட்லி மிச்சம். அமானுஷ சக்திக்கும் தெய்வ சக்திக்கும் நடக்கும் பிரச்சனையில் சிக்கி குள்ள மனிதராக மாறி இவர் ஹீரோ சந்திக்கும் பிரச்சனையே இந்த படத்தின் கதை. இந்த படத்தில் லிட்டில் ஜானாக நடித்த பென்ட்லி மிட்சம் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற நகரில் பிறந்தவர்.
இவருடைய தந்தை கிரிஸ்டோப மிட்சம். இவர் ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆவர். மேலும், ஒட்டுமொத்த குடும்பமும் நடிகர்கள் , நடிகைகள், மாடலிங்என கலை துறையில் உள்ளனர்.இந்த மொத்த குடும்பமும் கலை குடும்பமாகவே திகழ்ந்து வருகிறது.
இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தான் நடிக்க தொடங்கினார்.மேலும், 1985 ஆம் ஆண்டு “ப்ராமிஸ் டு கீப் ” என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து பல பிரபலமான தொலைக்காட்சிகளில் உள்ள சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.அதற்கு பின் 1989 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா கிறிஸ்டோப மிட்சம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில்ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார்.1991ல் ஆம் ஆண்டு ‘போறீஓவெர்ஸ்(borrowers ) ‘ என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1997 ஆம் ஆண்டு இவர் நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஹலோனோ மிட்சம் என்ற மகளும் உள்ளார்.மேலும்,2003ம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாகநோல்லி பேக்வார்,பென்ட்லி மிட்சம் ஆகிய இருவருக்கும் விவாகரத்து நடந்தது.
பின் 2004இல் ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.
லிட்டில் ஜான் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.