14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவன் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின், மீண்டும் சொந்த இடத்துக்கு நேற்று (14) திரும்பியதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றவெளியிலிருந்து கிரான் குளத்துக்கு ஏப்ரல் 9ஆம் திகதி வந்த மேற்படி காதலன் குறித்த மாணவியை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.