
கொழும்பு, பெப் 23: காகிதத் தாள் இருக்கும் வரை இலங்கை அரசு பணத்தை அச்சடிக்கும் என்று
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கமான “நவ சேவக சங்கமய”வின் பொதுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “அமெரிக்க டொலரின் உண்மையான மதிப்பு ரூ.250 க்கு சென்றுள்ளது. பூண்டு கொள்வனவில் ரூ. 2 பில்லியன், சர்க்கரை கொள்வனவில் ரூ.15.9 பில்லியன் ஊழல் நடந்துள்ளது. இலங்கை அரசு முன்பணம் செலுத்தும் சேவை போன்று செயற்படுகிறது.
பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஏன் நிதியை மீளப்பெற முடியாது? எரிசக்தி மேலாண்மைக்கும் எரிபொருளை உற்பத்தி செய்வதற்கும் அரசாங்கமே நிதியளிக்க வேண்டும் என்றார் அவர்.