வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று 21.04.2024 மாலை 03.30 மணியளவில் ஆரம்பமானது.
சென் செபஸ்ரியன் விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் செபஸ்ரியன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மருதங்கேணி பொலிஸ் அதிகாரி,வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பநாள் போட்டிகள் ஆரம்பமானது.
முதல் போட்டியாக உடுத்துறை பாரதி அணியை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் அணியும் இரண்டாவது போட்டியில் வெற்றிலைக்கேணி றம்போ அணியை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியும் மோதிக் கொண்டன
முடிவில் கட்டைக்காடு சென்மேரிஸ் மற்றும் உடுத்துறை செந்தமிழ் அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.