சீமெந்து உற்பத்தி தொடர்பில் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

கொழும்பு, பெப்.23

சீமெந்து உற்பத்தியை இலங்கையிலேயே மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பஸில் ராஜபக்ச கூறியதாவது,

நிர்மாணத்துறையில் கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லை. மருந்துப் பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்றும் வர்த்தகர்களிடம் கோரியுள்ளேன் என்றார்.

Leave a Reply