சினிமாவில் 15 வருடங்கள் : நன்றி தெரிவிக்கும் கார்த்தி!

சினிமா துறையில் 15 வருடங்கள் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு நடிகர் கார்த்தி  திரையுலக பிரபலங்கள், மற்றும் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள கார்த்தி, பருத்திவீரன் திரைப்படம் மூலம் என்னுடைய நடிப்புப் பயணம் ஆரம்பமானது ஆசிர்வாதம் என நினைக்கிறேன்.

என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சார் கற்பித்த ஒன்று. அவருக்குத்தான் மொத்த பெருமையும் சேரும்.  அதன் பிறகு பல பாடங்கள் கற்றாலும் அவர் எனக்குக் கற்றுத் தந்தது,  என்னை மூழ்க வைத்து,  நான் செய்வதை ரசிக்க வைத்தது என்பதை புதையலாக நினைக்கிறேன்.

இந்த அற்புதமான பாதையை ஏற்படுத்தித் தந்த அமீர் சார், ஞானவேல், அண்ணா,  என்னுடைய அன்பான ரசிகர்கள்,  மீடியா ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply