நிதி நெருக்கடிக்கு தீர்வாக இலங்கையில் முதலீடு செய்யத் தயார் – ஜெய்சங்கர்

நிதி நெருக்கடியைக் குறைக்க இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணப்படும் நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

குறிப்பாக அந்நியச் செலாவணியை பேணுவதற்கும், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் உதவியை வழங்கியுள்ளது.

இருப்பினும் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய பணம் இன்மை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply