மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

(கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியில் இடம்பெற்ற 2022 ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டத்தில் பசுமை விவசாயத்திக்கான உள்ளீடுகள் உரியகாலத்தில் வழங்கப்படும் என தீர்மானிக்காது திகதியை தீர்மானிக்கப்பட்டதை  எதிர்த்து,கடும் கண்டனம் தெரிவித்து  விவசாயி அமைப்புகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.2022 ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்றபோது அதில் இந்து வெளியேறிய  விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்று கூடிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர். 2022 ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையின் முன்னோடிக் கூட்டம் அரசாங்க அதிபர் கே..கருணாகரன் தலைமையில் கச்சோரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது விவசாயிகளின் பிரச்சனைகள் ஆராயப்பட்டது. இதன்போது விவசாயிகளான எங்களது முக்கியமான பிரச்சினையான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கான பசுமை விவசாயத்துக்கான உள்ளீடுகளை கடந்த வருடம் சிறந்தமுறையில் வழங்கவில்லை. இதனால்,ஒரு ஏக்கருக்கு 50 மூடை நெல்லை பெறவேண்டிய விவசாயிகள்,8 மூடை நெல்லை பெறவேண்டி ஏற்பட்டது.அதேவேளை, பாதிக்கப்பட்ட சுமார் 2500 விவசாயிகளுக்கு மானியங்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், சிறுபோக வேளாண்மையை செய்ய ஆயத்தங்கள் எடுத்தபோதும்,உள்ளீடுப் பிரச்சனை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.ஈந்த நிலையில் சிறுபோக வேளாண்மை திகதியைg தீர்மானிக்க முன்வந்தனர்.

Leave a Reply