தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம்…! உலக சிலம்பத் தலைவர் சுதாகரன் யாழில் பெருமிதம்…!

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று(03) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச சிலம்பம்  போட்டியை முதல்முறையாக 5 நாடுகளின் பங்கு பெற்றதுடன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளமையிட்டு பெருமை அடைகிறேன்.

யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம்  இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன்.

அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம்.

இலங்கை சிலம்பன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நாளைய தினம் சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சிலம்பம் போட்டிகள் மாலை வரை இடம்பெற்று பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறும்.

ஆகவே, குறித்த போட்டியில் பங்கு பெற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *