விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா

திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என திரிஷா கைவசம் பல படங்கள் உள்ளன.

சாய் பாபா கோவில்
நடிகர் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவிற்கு சாய் பாபா கோவில் ஒன்றை கட்டினார். அந்த கோவிலின் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை திரிஷா சமீபத்தில் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளாரா என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.

ஆனால், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளார் என உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *