மொரட்டுவை கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே தீ பரவியதுடன்,
மொரட்டுவ மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தற்போது தீயை கட்டுப்படுத்தி வருகின்றன.
மொரட்டுவை பொலிஸாரும், அருகில் வசிப்பவர்களும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.