எதிர்வரும் தேர்தல்களின் போது பிரச்சார நடவடிக்கைகளை கையாளும் வகையில் மொட்டுக் கட்சியின் ஊடகப் பிரச்சார அலுவலகமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் குறித்த அலுவலகம் இன்று திறக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
எதிர்வரும் தேர்தல்களின் போது அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக வெவ்வேறான பிரச்சார மற்றும் ஊடக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணி இந்த அலுவலகத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாக மொட்டுக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.