கிரானில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது…!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை படுகாட்டு வயல் பிரதேசத்தில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக அரச காணியை அபகரிப்பு செய்யும் முகமாக சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை வாழைச்சேனை பொலிசார் நேற்று மாலை (10) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த வாரம் முதல், கனரக இயந்திரங்களின் துணை கொண்டு பாரிய மரங்கள் அழிக்கப்பட்டு காடுகள் தள்ளப்பட்டு நெருப்பு வைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு பிரதேச மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து மேற் கொண்ட நடவடிக்கையினால் இவ் சட்ட விரோத காணி சுவிகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர்களில் இருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிசார் இன்று மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயன்படுத்தப்பட்ட 2 இயந்திரங்களில் ஒன்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.மற்றயது இயந்திர கோளாறு காரணமாக எடுத்து வரப்படவில்லையென தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக் கிராமங்களில் உள்ள அரச மற்றும் வன இலகாவிற்கு சொந்தமான காணிகள் பல தனவந்தனர்களினால் காடழிப்பு செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டு வருவதாக பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *