சம்மாந்துறை கோரக்கரில் அறநெறிப்பாடசாலை திறப்பு வைப்பு!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் அறநெறிப்பாடசாலை க்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதியுதவியுடனும்
சிவனருள் பவுண்டேசன் நிதியுதவியுடனும் அமைக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை கட்டிடமானது ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்ட போது 20.02.2022
இந்நிகழ்வு
அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் திரு எஸ். தினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீஸன், கலந்து கொண்டதுடன்
சிறப்பு அதிதிகளாக
சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் எம். எல். தாஸிம், சிவனருள் பவுண்டேசனுடைய தலைவர் கலாநிதி அனுசியா,சேனாதிராஜன், செயலாளர் திரு வே. வாமதேவன்,பொருளாளர் திரு க. ஜனாத்தனன்,
இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி
சம்மாந்துறை பிரதேசசெயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர் திருமதி க. ஶ்ரீபிரியா ,பாடசாலைஅதிபர் திரு எஸ். இளங்கோபன் மற்றும் ஆலய உபசெயலாளர் வி.மோகன், ஆலய நிர்வாகத்தினர் அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள்
கலந்துகொண்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வவுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் பரிசுகள் வழங்கப்பட்டது





