தமிழ் பொது வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகளுடன் விரைவில் பேச்சு! சிவில் சமூக செயற்பாட்டு குழு அறிவிப்பு!

தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த குழுவானது அடுத்துவரும் நாட்களில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து உரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

குறிப்பாக, பொது வேட்பாளர் விடயத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டை உடைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் நேரில் சந்திப்பதற்கு அக்குழு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் கட்சிகளுடனான உரையாடல்களை அடுத்து பொதுக் கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதோடு, பொதுக்கட்டமைப்பின் கீழாக பத்து உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இந்த உபகுழுக்கள் அரசியல் கட்சி, சின்னம், வேட்பாளர், தேர்தல் விஞ்ஞாபனம், நிதி, பிரசாரம் உள்ளிட்ட விடயங்களையும் கையாளும் வகையில் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply